தமிழகம்

தயவுசெய்து என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்! கெஞ்சும் நிர்மலாதேவி! வெளியான ஆடியோ!

Summary:

nirmala devi planed to go hospital


கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 2018 ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளனர்.

இந்தநிலையில் பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்த பின்னர், நேற்று நீதிமன்றத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை கணவனும், குடும்பத்தினரும் வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார்.

நிர்மலாதேவி க்கான பட முடிவு

பின்னர் அருப்புக்கோட்டைக்குச் சென்ற அவர், வீட்டிற்குச் செல்லாமல் அங்குள்ள பள்ளிவாசலுக்குள் தலைவிரி கோலத்துடன் திடீரென நுழைந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டார்.  இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் நிர்மலாதேவிக்கு மனநல பாதிப்பு என்று செய்திகள் கசியத்தொடங்கியது. இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி அவரது வழக்கறிஞருடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோ பதிவில், "நான் கோபமாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை. எனக்கு உடனே மனநல சிகிச்சை தேவைப்படுது. தினம் தினம் ஒவ்வொரு கூத்தாக நடக்கிறது. தயவு செய்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். மதுரைக்கு போனாலும் ஓகே இல்லை திருநெல்வேலி மருத்துவமனை என்றாலும் பரவாயில்லை.

தினந்தோறும் ஏதேதோ பிரச்னை வருகிறது. மருத்துவமனைக்குச்செல்ல இப்போதே தயாராக இருக்கிறேன். உடனே பேசிவிட்டு சொல்லுங்கள். நான் எப்போதும் அந்த மாதிரி நடந்து கொண்டதே கிடையாது. மனநெருக்கடியால் தினமும் நான் மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறேன் என பேசியுள்ளார்.


Advertisement