15 வயது சிறுமி கர்ப்பிணியான பரிதாபம்..! விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி.!

15 வயது சிறுமி கர்ப்பிணியான பரிதாபம்..! விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி.!


Nilgiris 15 Aged Minor Girl Sexual Abused and She Now Pregnancy

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் (வயது 49). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் வீட்டருகே 10 ஆம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். 

சிறுமியின் குடும்ப சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிய காமுகன், சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த கொடூரம் சில மாதமாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சிறுமிக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

Nilgiris

இதனால் சிறுமியின் தாய் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க அனுமதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. சிறுமியிடம் தாய் விசாரித்தபோது அப்துலின் பகீர் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து தேவாலா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தலைமறைவான அப்துலை கேரள மாநிலத்தில் உள்ள மன்னார்காடு பகுதியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.