13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
புத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் குளத்திற்கு அருகே கொண்டாட்ட நடவடிக்கைக்கு தடை.!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்னையில் களைகட்ட தொடங்கும் நிலையில், காவல்துறையினர் அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர். சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி போன்ற காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வாகன தணிக்கையும் இன்று இரவு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே சென்னையில் மெரினா பீச் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை இருசக்கர வாகனங்களில் விதிகளை மீறி செயல்படுவோர் எண்ணிக்கை அதிகளவு இருக்கும். இதன் காரணமாக 150 இடங்களில் வாகன தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை தாம்பரம் காவல் ஆணையர் இது தொடர்பாக கூறுகையில், தாம்பரம் பகுதிகளில் இருக்கும் விடுதிகளில் நீச்சல் குளங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோரை தடுப்பதற்கு 150 இடங்களில் வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.