அரசியல் தமிழகம்

முதல்வர் பொறுப்பேற்கும் மு.க ஸ்டாலின் வசம் என்னென்ன இலாகா உள்ளது தெரியுமா? முழு பட்டியல் இதோ!!

Summary:

தமிழக முதல்வராக ஸ்டாலின் நாளை பதவியேற்க இருக்கும்நிலையில், 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச

தமிழக முதல்வராக ஸ்டாலின் நாளை பதவியேற்க இருக்கும்நிலையில், 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவைப் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சி அமைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கும் நிலையில், தமிழக முதல்வராக முதல் முறையாக ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார்.

கொரோனா காரணமாக பதவியேற்பு விழா மிக எளிமையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் யார் யார்? அவர்களுக்கான துறைகள் எவை என்பது குறித்து ஆளுநர் மாளிகை இன்று பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதேபோல் முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் வசம் எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்திய ஆட்சிப்பணி
இந்திய காவல் பணி
பொது நிர்வாகம்
உள்துறை இலாகா
மாற்றுத் திறனாளிகள் நலன்
சிறப்புத்திட்ட செயலாக்கம்
மாவட்ட வருவாய் அலுவலர்கள் போன்ற இலாகாக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


Advertisement