ரத்தத்தில் கையெழுத்திடும் புதிய போராட்டத்தை அறிவித்த சத்துணவு பணியாளர்கள்... காரணம் என்ன.?

ரத்தத்தில் கையெழுத்திடும் புதிய போராட்டத்தை அறிவித்த சத்துணவு பணியாளர்கள்... காரணம் என்ன.?new-protest-was-announced-by-the-association-of-nutriti

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக  ரத்தத்தில் கையெழுத்திடும் போராட்டத்தினை வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி நடத்த இருப்பதாக சத்துணவு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சத்துணவு பணியாளர்களுக்கான 4200 காலிப்பணியிடங்களை நிரப்ப கூறியும்  ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் மாத ஓய்வூதியமான 6750 ரூபாய் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட கோரியும்  பல போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.

tamilnaduஇதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி  ரத்தத்தில் கையெழுத்துட்டு மனு அளிக்கும் போராட்டத்தினை நடத்த இருப்பதாக சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதுவரை நடத்திய இந்தப் போராட்டங்களுக்கும் பலனில்லாததால் இந்தப் போராட்டத்தை கையில் எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

tamilnaduஇது தொடர்பாக பேசியிருக்கும் சத்துணவு பணியாளர் சங்கத் தலைவர் 
சந்திரசேகரன் சத்துணவு பணியாளர்களின் ஏராளமான கோரிக்கைகளை இதற்கு முன்பு அரசுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லாததால் ரத்தத்தில் கையெழுத்திட்டு மனு கொடுக்க உள்ளதா தெரிவித்திருக்கிறார்.