கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
ஓபிஎஸ் வகித்து வந்த பதவியை பறித்து யாருக்கு கொடுத்துள்ளார் பார்த்தீங்களா.! சற்றுமுன் அறிவிப்பு.!

அதிமுகவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் ஜூலை 11ஆம் தேதி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார். இந்தநிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/KFJvseUi4O
— AIADMK (@AIADMKOfficial) July 19, 2022
அந்த அறிவிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் மற்றும் எதிர்க்கட்சி துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.