திருமண பட்டு வேட்டியுடன் ரயில்முன் பாய்ந்த புதுமாப்பிள்ளை! கடைசியாக கண்ணீருடன் சொன்ன அதிர்ச்சி காரணம்!!



new-married-groom-commits-suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் காளியப்பன். இவரது மகன் தனுஷ்கோடி. 20 வயது நிறைந்த இவருக்கு பேஸ்புக் மூலம் நாமக்கல்லை சேர்ந்த பென்னி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

 அதனை தொடர்ந்து இருவரும் நாமக்கலில் தங்கியிருந்தனர் இந்நிலையில் சமீபத்தில் இருவரும் கச்சிராபாளையத்தில் உள்ள பென்னி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பென்னிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை அங்கேயே விட்டுவிட்டு தனுஷ்கோடி மட்டும் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார்.

marriage

இதனை தொடர்ந்து  தனது தந்தைக்கு போன் செய்து தனுஷ்கோடி பென்னி என்னுடன் வரவில்லை அவரது பெற்றோர்கள் பேசியதை வைத்து பார்க்கையில், அவர்களை அவளையும் என்னையும் பிடித்து விடுவார்கள்போல தெரிகிறது.அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது, நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஊர்முழுவதும் தேடி பார்த்துவிட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் அவர் சின்னசேலத்திலிருந்து அம்மையகரம் செல்லும் ரயில்வே கேட் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் தனுஷ்கோடி திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.