தமிழகம்

திருமணமாகி ஒரு மாசமாச்சு.. சொன்னதை நிறைவேற்றாத காதல் கணவர்.! புதுப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.!

Summary:

திருமணமாகி ஒரு ஒரு மாசமாச்சு.. சொன்னதை நிறைவேற்றாத காதல் கணவர்.! புதுப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.!

கடலூர் மாவட்டத்தில் காதல் கணவரது வீட்டில் கழிப்பறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர் 27 வயது நிறைந்த ரம்யா. இவர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து கணவரின் வீட்டிற்கு சென்றபோதுதான் ரம்யாவிற்கு அவரது வீட்டில் கழிவறை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, அவர் வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறி சமாதானம் செய்துள்ளார்.  ஆனால் ஒரு மாதமாகியும் அவர் வேறு வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை. மேலும் தனது வீட்டில் கழிப்பறையும் கட்டவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த ரம்யா இதுகுறித்து கார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து ரம்யாவின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement