அரசியல் தமிழகம்

தமிழக அரசு அவசர சட்டம்! மேயரை தேர்ந்தெடுப்பது யார்?

Summary:

new law for election

தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் இதுவரை அவற்றின் உறுப்பினர்களை போல நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அதாவது மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டு மேயரையும், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களையும் தேர்ந்தெடுத்து வந்தனர்.

இந்தநிலையில், விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தயார் ஆகிவந்தது. இந்த தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் அவசர சட்டத்தை நேற்று தமிழக அரசு பிறப்பித்தது.

இந்தநிலையில் தமிழக கவர்னர் புதிய அவசர அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார். அதில், தமிழ்நாடு நகராட்சி சட்டத்தை திருத்தி, அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்டம் ‘தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (5-வது திருத்தம்) அவசர சட்டம்-2019’ என்று அழைக் கப்படும். 

அதன்படி, மாநகராட்சி மேயரை, சாதாரண முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள், முதல் கூட்டத்தில் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகிப்பார். அவர் கவுன்சிலர் பதவியிலும் வகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் கூறுகையில், மக்கள் நலன் கருதியும், பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவை கருதியும், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்வதற்கு பதிலாக கவுன்சிலர்களே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.


Advertisement