தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் 8 நிறுவனங்கள் முதலீடு! 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு! கொரோனா சமயத்தில் தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் 8 நிறுவனங்கள் முதலீடு! 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு! கொரோனா சமயத்தில் தமிழக அரசு அதிரடி!



new industrial companies in tamilnadu

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.10,399 கோடியில் 8 தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் நேற்று நடந்தது. இத்திட்டங்களின் மூலம் சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் முதலமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்தநிலையில் முதலமைச்சர் முன்னிலையில் நேற்று 8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு ‘காணொலிக்’ காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 

corona

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 7,542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சோலார் செல்ஸ் மற்றும் மோடுலஸ் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த 8 திட்டங்களின் மூலம் ரூ.10 ஆயிரத்து 399 கோடி முதலீடுகள் மற்றும் சுமார் 13 ஆயிரத்து 507 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.