கல்யாணம் ஆகி 8 மாசம்தானே ஆகுது!! அதுக்குள்ள இப்படியா ஆகணும்!! புதுமாப்பிள்ளை அழுகியநிலையில் சடலமாக மீட்பு..New bride dead mysteriously near viruthachalam

திருமணம் முடிந்த 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன் மகன் தனசேகர் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனஞ்செழியன் வீடு திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் அவரை தேடி அலைந்தபோது அவரது இருசக்கர வாகனம் ஆலடி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள பெரிய ஏரி முட்புதர் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனஞ்செழியன் உறவினர்கள் தனஞ்செழியனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரை அடுத்து போலீசார் தனஞ்செழியனின் இருசக்கர வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தை சோதனை செய்தபோது, அங்கிருந்த முட்புதரில் தனஞ்செழியன் உடல் அழுகி இறந்தநிலையில் கிடப்பதை கண்டுபிடித்தனர். சடலத்தை போலீசார்கைப்பற்றி பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தனஞ்செழியன் கொலை செய்யப்பட்டாரா அல்லது, தற்கொலை செய்துகொண்டாரா என விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.