ஜெட் வேகத்தில் பறந்த தனியார் பஸ்.. ஆவேசமடைந்து தட்டிக்கேட்ட சூப்பர் வுமன்.. போலீஸ் அபராதம்.!

ஜெட் வேகத்தில் பறந்த தனியார் பஸ்.. ஆவேசமடைந்து தட்டிக்கேட்ட சூப்பர் வுமன்.. போலீஸ் அபராதம்.!


nellai women fight with private bus driver on road

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அருண்மொழி என்பவர் தனது 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து இவர்களது இடிப்பதை போல சென்றுள்ளது. 

nellai women

இதுபோல தொடர்ந்து இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. இதனால் அருண்மொழி ஆவேசமடைந்து பேருந்திற்கு அருகில் முன் பக்கமாக சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேருந்தை நிறுத்திவைத்தார். பின்னர் அவரது மனைவி வாகன ஓட்டுனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

nellai women

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறை விரைந்து வந்து அதி வேகமாக வந்த தனியார் பேருந்துக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அத்துடன் விபத்தை ஏற்படுத்துகின்ற வகையில், மின்னல் வேகத்தில் வந்த அந்த தனியார் பேருந்திடம் பெண் ஒருவர் ஒற்றை ஆளாக சண்டையிட்டு போராடிய சம்பவம் அங்கிருந்த மக்களால் வெகுவாக பாராட்ட பட்டது.