சசிகலா வந்த பிறகு இதனை செய்யாவிட்டால், அதிமுக இரண்டாக உடையும்.! முக்கிய புள்ளி ஓப்பன் டாக்.!

சசிகலா வந்த பிறகு இதனை செய்யாவிட்டால், அதிமுக இரண்டாக உடையும்.! முக்கிய புள்ளி ஓப்பன் டாக்.!


nanchil sampath talk about ADMK

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, முழுமையாக குணமடைந்து நேற்று முன்தினம் சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஒருவாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். ஒருவாரத்திற்கு பிறகு சசிகலா தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா சென்ற காரின் முகப்பில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா அவர்கள் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சென்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Admk

அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நாஞ்சில் சம்பத் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருக்கும் போது தான் சிறைக்கு சென்றார். ஆகையால் அ.தி.மு.க கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை உள்ளது. திராவிட இயக்கத்தை பொறுத்தவரை பொது செயலாளர் தான் கட்சியை இயக்க முடியும். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கருத்தை வைத்துப் பார்க்கும்போது சசிகலாவை அதிமுகவில் சேர்த்து கொள்வதாக தெரிகிறது. சசிகலாவை சேர்க்காவிட்டால் அதிமுக இரண்டாக உடையும் என  நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.