நண்பனை நம்பி வீட்டில் விட்டதற்கு, அத்தையை கைக்குள்போட்ட துரோகி; துள்ளத்துடிக்க கொன்று ஆத்திரத்தை தீர்த்த பயங்கரம்.!



namakkal-man-killed-affair-issue

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அகலாம்பட்டி காலனி பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரின் மகள் சீனு (வயது 23). கோவை விமான நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கிறார். விடுமுறைக்காக இவர் வீட்டிற்கு தற்போது வந்துள்ளார். 

அப்பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரின் மகன் பிரவீன் குமார் (வயது 21). கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இருவரும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். 

இதே பகுதியில் பிரவீன் குமாரின் தாய்மாமா சத்யா வசித்து வருகிறார். இவரின் மனைவி மீனா (வயது 29). சத்யாவின் வீட்டிற்கு சீனு அடிக்கடி சென்று வந்த நிலையில், மீனாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

namakkal

இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளத்தொடர்பாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் சத்யாவிற்கு தெரிய வரவே, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சீனு மீனாவை சந்திக்க கூடாது என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சீனுவை கொலை செய்யாமல் விட மாட்டேன் என பிரவீன்குமார் கூறிவந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு வீட்டு வாசலில் படுத்து உறங்கிய சீனுவை பிரவீன் குமார் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இந்த வழக்கில் பிரவீன் குமார் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.