தற்கொலை செய்துகொண்ட கோடீஸ்வரர்! தற்கொலைக்கு முன் மனைவியிடம் பேசிய உருக்கமான வார்த்தைகள்.
தற்கொலை செய்துகொண்ட கோடீஸ்வரர்! தற்கொலைக்கு முன் மனைவியிடம் பேசிய உருக்கமான வார்த்தைகள்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த். 50 வயதான இவர் மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளரான இவர், ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் உறவினர் ஆவார். இவரது மனைவி தமிழ்செல்வி, கல்லூரி விரிவுரையாளராக உள்ளார். இவர்களுக்கு 17 வயதில் அபர்ணா என்ற ஒரு மகள் உள்ளார்.
மருத்துவர் மற்றும் அரசியல் பிரமுகரான இவருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர் ஆனந்த் சில தினங்களுக்கு முன்னர் தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது மனைவியிடம் பேசிய உருக்கமான வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது.
தற்கொலைக்கு முன் தனது தனது மனைவிக்கு போன் செய்த அனந்த், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். கோவையில் இருந்த மனைவி தனது கணவருக்கு போனில் சமாதானம் கூறியுள்ளார். தான் நேரில் வந்து பேசுவதாகவும், தற்கொலை எண்ணத்தை கைவிடுமாறும் கேட்டுள்ளார்.
இருப்பினும் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை அனுப்பி ஆனந்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் ஆனந்த் இருக்கும் இடத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இருவரும் வயலில் இருந்து வீட்டுக்கு கிளம்பலாம் என கூறிவிட்டு ஆனந்த் காரை எடுக்க செல்வதாக கூறி சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு பிரவீன் என்ற அந்த இளைஞர் அங்கு சென்று பார்க்கையில் துப்பாக்கியால் தனது தாடையில் சுட்டுக்கொண்டு ஆனந்த் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மனைவி தனது கணவருக்கும், தனக்கும் அடிக்கடி சண்டை வருவதாகவும், இந்த முறையும் அப்படி சண்டை வந்தது.
இதனால் தனது கணவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அவரது மனைவி ஆனந்தின் உடலை பார்த்து கதறி அழுதவாறு கூறினார்.