ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்த, அர்ச்சகருக்கு நேர்ந்த சோதனை! அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்.!

ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்த, அர்ச்சகருக்கு நேர்ந்த சோதனை! அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்.!


namakkal-anjaneyar-temple-priest-death-by-fallen-accide

நாமக்கல்லில் புகழ்மிக்க மாபெரும் ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைந்துள்ளது. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையின்போது  அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் 8 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு மரத்தால் செய்யப்பட்ட படிக்கட்டில் ஏறி பூஜை செய்தார். அப்பொழுது அவர் ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார்.

இந்நிலையில் அர்ச்சகர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே  விழுந்துள்ளார் .

இதனால் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அர்ச்சகர் வெங்கடேசனை அங்கிருந்த பக்தர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சகர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.