காலம் மாறிப்போச்சு.! நல்லேர் பூட்டும் விழாவில் காளைகளை ஓரங்கட்டி டிராக்டர்களை களமிறக்கிய விவசாயிகள்.!

காலம் மாறிப்போச்சு.! நல்லேர் பூட்டும் விழாவில் காளைகளை ஓரங்கட்டி டிராக்டர்களை களமிறக்கிய விவசாயிகள்.!



naller poottum nigalchi

தென் மாவட்டங்களில் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய முறைப்படி நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபாடு செய்வது வழக்கம். இந்தநிலையில் சித்திரை மாதம் முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பாரம்பரிய முறைப்படி நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபாடு செய்தனர்.

ஆனால் தற்போது விவசாயிகள் உழவு பணிகளில் அதிகளவு டிராக்டர்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் சித்திரை மாதம் முதல் நாளான நேற்று விவசாயிகள் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சியில் தங்களது டிராக்டர்களை கொண்டுவந்து உழவு செய்து விவசாயிகள் வழிபாடு செய்தனர்.

சித்திரை முதல் நாளில் விவசாயிகள் தங்கள் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சாகுபடி நிலத்தில் பழங்கள், நெல், அரிசி, விதை, நவதானியம் உள்ளிட்டவைகளை வைத்து வருணபூஜை செய்து சூரிய பகவானை வழிபட்டு பின்னர் விளைநிலத்தில் வேண்டிக்கொண்டு காளை மாடுகளுடன் ஏர்க்கலப்பையால் உழுது விதை நெல் தூவி விவசாய பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது நவீன காலம் ஆகிவிட்டதால் விவசாயிகள் தங்களது டிராக்டர்களை கொண்டுவந்து உழவு செய்து வழிபாடு செய்கின்றனர்.