ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி! என்ன காரணம்?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி! என்ன காரணம்?


nalini-suicide-attempt

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  சக கைதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் நளினி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

nalini

இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர், சக கைதியுடன் நளினி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது சிறை காவலர் ஒருவர் தலையிட்டதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக நளினி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், வேலூர் மகளிர் சிறையில் உள்ள தனது மனைவி நளினியை விரைவாக புழல் சிறைக்க மாற்ற ஏற்பாடு செய்யும்படி ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் தன்னை கேட்டுக்கொண்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.