தமிழகம்

100 கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கம்..! நாகர்க்கோவில் இளைஞர் காசி வழக்கில் புது திருப்பம்..! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!

Summary:

Nagarcoil kasi case moved to CBCID police

பல பெண்களை ஏமாற்றி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம் சம்பாதித்துவந்த நாகர்கோவில்  இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவந்தநிலையில் அந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

100 கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள், இல்லத்தரசிகள் என நெருக்கமாக பழகி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்த, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் காசி. இருத்தியாக, சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து குமரி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நாளுக்கு நாள் காசி பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளநிலையில், சமீபத்தில் காசி சில பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் காசியின் வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement