சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்!! தமிழனின் பாரம்பரியத்தை சின்னமாக ஒதுக்கியதால் மகிழ்ச்சியில் சீமான் கட்சியினர்!!

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்!! தமிழனின் பாரம்பரியத்தை சின்னமாக ஒதுக்கியதால் மகிழ்ச்சியில் சீமான் கட்சியினர்!!


naam-tamilar-party-symbol-anounced

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அணைத்து அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிகள் பங்கீடு, தொகுதிகள் ஒதுக்குவது என அணைத்து கட்சிகளும் வேகமாக செயல்பட்டுவருகிறது.இதற்கிடையே அங்கீகாரம் கிடைக்காத சில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச்லைட்’ சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டிருந்த மோதிரம் சின்னம் ஒதுக்கப்படாததால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

seeman

இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கீடு செய்ய கேட்கப்பட்ட நிலையில், அச்சின்னம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

ஆனாலும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.