நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
போலீஸ் அதிகாரி மீது கொலை வெறி தாக்குதல்... கள்ளத்தொடர்பு காரணமா.? தீவிர விசாரணை.!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகன் (54). இவர் நேற்றிரவு 10 மணியளவில் சாதாரண உடையில் உப்புகுளம் கிராமத்தில் தனியாக சென்றுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் இவரை தாக்க முயன்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் எஸ்.ஐ முருகனின் தலையிலும் நெற்றியிலும் காயம் ஏற்பட்டு நிலைதடுமாறி அங்கேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தொடர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். இந்நிலையில் தன்னை தாக்க முயன்ற மர்ம நபர்கள் மீது எஸ்.ஐ முருகன் எவ்வித வழக்கும் அளிக்கவில்லை. இது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருந்த நிலையில் காவல்துறையே தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது.

காவல்துறை விசாரணையில் எஸ்.ஐ முருகனுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த, கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவுக்காரர்கள் அவரை திட்டமிட்டு தாக்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எஸ்.ஐ முருகன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து மர்ம நபர்களை பிடித்து, விசாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் திருமணம் கடந்த உறவினால் தான் ஏற்பட்டிருக்கும் என்று அந்த சுற்று வட்டார பகுதி மக்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!