தமிழகம்

மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி... திண்டுக்கல் அருகே பரபரப்பு..!

Summary:

மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி... திண்டுக்கல் அருகே பரபரப்பு..!

திண்டுக்கல் அருகே கூலி தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு அமைதி பூங்கா பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி (61) இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும், ஐந்து பிள்ளைகளும் உள்ளனர். 

சடையாண்டி தினமும் இரவு நேரத்தில் அமைதி பூங்கா பகுதியில் உள்ள வனத்துறை கட்டிடத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் வனத்துறை கட்டடத்திற்கு தூங்கச் சென்ற சடையாண்டி நேற்று அதிகாலை வனத்துறை கட்டிடத்தில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடையாண்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சடையாண்டி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டிவீரன்பட்டி யில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement