தமிழகம்

மேலே ஒரு பாவாடை மட்டும் இருந்துச்சு..! மாடு மேய்க்க சென்றவர்கள் பயந்து ஓடினார்கள்..! வனப்பகுதிக்குள் 10 மாதம் கிடந்த மனித எலும்புக்கூடு..!

Summary:

Murder in velore forest human skeleton found

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை வனச்சரக பகுதியில் அடையாளம் தெரியாத மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள், மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, குடியாத்தம் பகுதியை சார்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம், ஆட்களை அடித்துக் கொன்று, சடலத்தை வனப்பகுதிக்கு  செல்லும் அடர்ந்த பகுதிகளில் வீசி செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்தவுருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மாடு மேய்ப்பதற்காக சென்றபோது மனித எலும்பு கூடு ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், குறிப்பிட்ட நபர் 10 மாதங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். மேலும், இறந்தவர் யார், ஆணா அல்லது பெண்ணா? என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு, தீர்த்தமலை வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.


Advertisement