தமிழகம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சமூகப் போராளி முகிலன் கைது! பெண் அளித்த பரபரப்பு புகார்!

Summary:

mukilan arrested

தமிழகத்தின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முகிலன். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா். துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான சில முக்கிய வீடியோ ஆதாரங்களை முகிலன் வெளியிட்டாா். பிப்ரவரி 15ம் தேதி வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவு முகிலன் மாயமானாா். 

இதனைத் தொடா்ந்து முகிலனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி பூங்கொடி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாாிகள் விசாரித்து வந்த நிலையில், காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தகவல் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் மாயமான முகிலனை திருப்பதியில் மீட்ட போலீசார் அவரை பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதில் அவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். 

இதனையடுத்து முகிலன் திருமணம் செய்து கொள்வதாக உத்தர வாதம் அளித்து ஏமாற்றுதல், பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தான், தற்போது முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement