தமிழகம்

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானார்! சோகத்தில் அரசியல் பிரமுகர்கள்!

Summary:

MP vasanthakumar dead by corono

தமிழகம் முழுவதும் அதிகமாக கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோயை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நோயானது பாரபட்சம் இன்றி ஏழை மக்கள் முதல் பணக்காரர், பிரபலங்கள் என அனைத்து மக்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்நோய்க்கு சில பிரபலங்கள் பலியாகியும் உள்ளனர். 

இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். 

இதனை தொடர்ந்து சுயநினைவு இழந்த நிலையில், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement