சொத்து தகராறில் தடுக்க வந்த தாயை தடியால் அடித்து துடிதுடிக்க கொன்ற மகன்.. அண்ணன் - தம்பியால் நேர்ந்த கொடூரம்..!!

சகோதரர்களுக்குள் சொத்து மற்றும் கடனை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, தடுக்க வந்த தாயை தடியால் அடித்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலம்மாள். இவருக்கு சுரேஷ்குமார், வேல்முருகன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். வேலம்மாளுக்கு சொந்தமான 1 ஏக்கர் 80 சென்ட் நிலத்தையும், 16 லட்சம் ரூபாய் கடனையும் சரிசமமாக பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 24-ஆம் தேதி இரு குடும்பத்தாரும் சரமாரியாக தாக்குதல் நடத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் தடுக்க வந்த நிலையில், மூத்த மகன் தடியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து மூத்த மகன் சுரேஷ் குமார், அவரது மனைவி மற்றும் மைத்துனரை கொலை வழக்கிலும், இளையமகன் வேல்முருகனை கொலை செய்ய முயற்சித்த வழக்கிலும் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.