ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
BREAKING: புரட்டி எடுக்க போகும் Montha புயல்! அக்டோ. 28 இல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு! தமிழகத்திலும் கனமழை எச்சரிக்கை....
தென் இந்தியா மீண்டும் புயல் அச்சுறுத்தலுக்குள் நுளைந்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய எச்சரிக்கை ஆந்திராவையும் தமிழகத்தையும் கூர்மையாகக் கவனிக்க வைத்துள்ளது.
ஆந்திர கரையை நோக்கி நகரும் Montha புயல்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே வரும் அக்டோபர் 28ஆம் தேதி மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் சாத்தியம்!
அதிகபட்சம் 110 கி.மீ வேக காற்று வீச வாய்ப்பு
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் அதிகபட்சம் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு
ஆந்திராவை முதன்மையாகத் தாக்கும் Montha புயல் காரணமாக தமிழகத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல தாழ்வுப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் தொடர்ச்சியாக உருவாகும் புயல்களின் தாக்கம் காரணமாக மக்கள் நிலைமை குறித்து கவலையடைந்துள்ளனர்; அதிகாரிகள் தொடர்ந்து அவசர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்க கடலில் உருவாகும் "மோந்தா" புயல்! இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... வானிலை மையம் அறிவிப்பு!