பெற்ற குழந்தையை ஆற்றில் தூக்கி வீசிய இளம் தாய்! அதிர்ச்சி சம்பவம்.!

பெற்ற குழந்தையை ஆற்றில் தூக்கி வீசிய இளம் தாய்! அதிர்ச்சி சம்பவம்.!


mom-throwed-child-in-river

கோவை மாவட்டம், ஒண்டிபுதூரை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கும் சத்யா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த தம்பதிக்கு 14 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்யா தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கணவரிடம் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதிக்கு வந்துள்ளார். கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் குழந்தையை தூக்கிக்கொண்டு சத்யா நடந்து வந்துள்ளார். அப்போது கரூர் அருகே நொய்யல் ஆற்றுப்பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென கையில் இருந்த குழந்தையை ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்.

riverஇதனையடுத்து சந்தியாவும் பிளேடால் அவரது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள், சத்யாவை மீட்டு, போலீசார் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்நிலையில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். நேற்று இரவு வரை குழந்தை கிடைக்கவில்லை. தொடர்ந்து குழந்தையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.