தமிழகம்

மதுவினால் சீரழியும் குடும்பங்கள்.! குடிபோதை கணவரின் செயல்.! 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கவுரி என்ற 24 வயது பெண்ணுடன் திரும

சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கவுரி என்ற 24 வயது பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகளும், 1½ வயதில் ஒரு மகனும் உள்ளனர். பெயிண்டர் வேலை செய்துவரும் ரமேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்துள்ளார். இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று காலை ரமேஷ் அவரது மனைவி கவுரியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் கொடுக்க பார்த்ததால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் கணவனின் தொல்லை தாங்காமல் கவுரி பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் அவரிடம் பணத்தை வாங்கிவிட்டு மது அருந்த வெளியே சென்றுள்ளார் ரமேஷ்.

இரண்டு பிள்ளைகளை வைத்துள்ளோம் ஆனால் கணவன் இப்படி செய்கிறாரே என்ற மனவேதனையில் இருந்துள்ளார் கவுரி. ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த கவுரி, குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் கதவை பூட்டி உள்தாழ்ப்பாள் போட்டு விட்டு, தனது மகள் மற்றும் மகன் இருவரையும் தனித்தனியாக புடவையால் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் மற்றொரு புடவையால் கவுரியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் கவுரியை பார்ப்பதற்காக வந்து கதவை தட்டியுள்ளார்.  நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டுக்குள் கவுரி தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுவினால் நாளுக்கு நாள் பல குடும்பங்கள் நாசமாகி வருகிறது.


Advertisement