தமிழகம்

ஒழுங்கா என் காச கொடுங்க... மறுநிகழ்ச்சி ஏற்பாடு செய்த நபர்.! புதுக்கோட்டை நபரால் வியந்துபோன தமிழகம்.!

Summary:

ஒழுங்கா என் காச கொடுங்க... மறுநிகழ்ச்சி ஏற்பாடு செய்த நபர்.! புதுக்கோட்டை நபரால் வியந்துபோன தமிழகம்.!

சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பத்தில் மொய்விருந்து விழாக்கள் தொடங்கப்பட்டது. அது மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த மொய் விருந்து விழாக்கள் அதிகப்படியாக நடக்கின்றது.

கொரோனா சமயத்திலும் இந்த பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மொய்விருந்து விழா நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள வெட்டன்விடுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மொய்விருந்து விழா நடத்தியுள்ளார்.

ஆனால் அந்த விழாவில் சிலர் இவருக்கு மொய் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் விடுபட்ட மொய் பணத்தை மீண்டும் வாங்குவதற்காக விடுபட்டோர் மொய் மறுவிருந்து விழா ஏற்பாடு செய்து அதற்கான அழைப்பிதழை அச்சடித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த அழைப்பிதழில் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்ற திருக்குறளையும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement