அட.. பாத்துமா!! நிறைமாத கர்ப்பம்.! நடிகை அமலாபால் செய்யும் லூட்டியை பார்த்தீங்களா.!



Amala paul dance in 9 month pregnancy

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.  இப்படம் வெற்றி அடையவில்லை.. தொடர்ந்து அமலாபால் மைனா படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் அவர் விஜய், விக்ரம், ஆர்யா, சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . ஆனால் வேறுபாடு காரணமாக இருவரும் சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதனை தொடர்ந்து கவர்ச்சிக்கு தாவிய அவர் படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வந்தார். இந்நிலையில் அமலா பால் தனது நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் அமலா பால் தற்போது கர்ப்பமாக உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், தனது வீடியோ போன்றவற்றை பகிர்வார். இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் உற்சாகத்தோடு க்யூட்டாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.