மைதானத்திலையே சண்டை.. லக்னோ அணியில் இருந்து விலகுகிறாரா கே.எல் ராகுல்? லக்னோ அணி நிர்வாகம் அளித்துள்ள பதில்



lsg-owner-fight-with-kl-rahul

கேப்டன் பதவியில் இருந்து கே.எல் ராகுல் விலகுகிறாரா என்ற கேள்விக்கு லக்னோ அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது.

சொதப்பிய லக்னோ அணி

ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிய கடைசி போட்டி கிரிக்கெட் ரசிர்களுக்கு பெரிய வாணவேடிக்கையாக அமைந்தது. போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது. அணியின் கேப்டன் KL ராகுல் T20 போட்டி போல் இல்லாமல் ஒருநாள் போட்டிபோல் விளையாடுவதாகவும் விமர்சனம் எழுந்தது.

இதையும் படிங்க: சச்சினின் இந்த வாழ்நாள் சாதனையை அசால்டாக உடைத்த சாய் சுதர்சன்!! புதிய சாதனை..

kl rahul

பந்துகளை பறக்கவிட்ட ஹைதராபாத்

இதனை அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 167 ரன்களை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் இருவரும் லக்னோ அணியின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட லக்னோ அணி ஓனர்

இதனால் லக்னோ அணியின் பிளே ஆப் வாய்ப்பும் கேள்விக்குறியானது. இதனால் கோபமடைந்த லக்னோ அணியின் ஓனர் சஞ்சீவ் கோயங்கா போட்டி முடிந்த பின்னர் மைதானத்திலேயே கே.எல் ராகுலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

kl rahul

KL ராகுல் விலகிவிட்டாரா?

இந்த சமபவத்திற்கு பிறகு KL ராகுல் லக்னோ அணியில் இருந்து விலகிய அவர் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும், இனி அவர் அணியின் கேப்டனாக செயல்படப்போவதில்லை எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், 14 ஆம் தேதி டெல்லி அணியுடன் நடைபெறும் போட்டியிலும், மும்பை அணிக்கு எதிராக 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் கடைசி போட்டியிலும் அவரே கேப்டனாக இருப்பார் என லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிரபல நடிகையை கரம்பிடிக்கும் கே.எல் ராகுல்.! எப்போது திருமணம்.? மணப்பெண் யார் தெரியுமா.?