விரைவில்.. 10,12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன குட் நியூஸ்.!vijay-wish-to-10-and-12th-students-after-result

தமிழகத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளிவந்தது. அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதில் தமிழகத்தில் இந்த ஆண்டு 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து 

இந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மற்றும் மாணவியர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

மாணவர்களுடன் சந்திப்பு 

கடந்த வருடமும் நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது