என் அப்பாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறிருச்சு... ஸ்டார் பட இயக்குனர் இளன் நெகிழ்ச்சி பதிவு!!Ilan post about his father in star movie

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஸ்டார். இந்த படத்தை பியார் பிரேமா காதல்  படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இளன் இயக்கியுள்ளார். இளன் நடிகர் ராஜாராணி பாண்டியனின் மகன் ஆவார். ஸ்டார் படத்தில் அதிதி போங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

வெற்றிநடைப்போடும் ஸ்டார் 

மேலும் ஸ்டார் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனரான இளன் அவரது அப்பா குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இளனின் நெகிழ்ச்சி பதிவு 

அவர் வெளியிட்ட பதிவில், ஸ்டார் படத்தில் எனது அப்பா தோன்றியபோது அரங்கமே அதிர ஒலித்த கைத்தட்டல்களால் எனக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. எனது வாழ்வில் இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும். அவரது நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது என மனம் நெகிழ குறிப்பிட்டுள்ளார்.