பாவாடை தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி.! செம கியூட்டாக போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!



Bigboss Janani dancing video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக  கலந்து கொண்டு ரசிகர்களிடையே  பிரபலமானவர் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குழந்தைத்தனமான பேச்சால், செயலால் ரசிகர்களை கவர்ந்தார். அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.

​​​​​​லியோ படத்தில் ஜனனி 

 இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று வெல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், அவர் 70 நாட்களில்  நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். மேலும் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை நடிகர் விஜய்யே பாராட்டி இருந்தார்.

டான்ஸ் வீடியோ 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஜனனி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த வகையில் அவர் தற்போது தாவணி பாவாடையில் செம க்யூட்டாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.