மக்களின் நலனே முக்கியம்.! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு செல்கிறார்.!

மக்களின் நலனே முக்கியம்.! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு செல்கிறார்.!


mk stalin went to trichy

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கவுள்ளனர். திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

பின்னர் தஞ்சை மாவட்டத்தில் முதலைமுத்துவாரி கொடிங்கால் வாய்க்கால் மற்றும் வெண்ணாற்றில் நடைபெறும் பணிகளையும் பார்வையிடுகிறார். மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் திருச்சி வருகிறார்.

மாலையில் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் முதலமைச்சர், அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து நாளை காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுகிறார். இந்தநிலையில், முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருவதையொட்டி திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.