திடீரென ஓடும் அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.! வாயடைத்து போன மக்கள்..! வைரல் வீடியோ!

திடீரென ஓடும் அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.! வாயடைத்து போன மக்கள்..! வைரல் வீடியோ!



mk-stalin-visit-govt-bus

சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென பேருந்தில் ஏறி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கண்ணகி நகரில் தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருந்தபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க ஸ்டாலின் கண்ணகி நகருக்கு வந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென எறியுள்ளார். அப்போது மாநகர பேருந்தில் பயணித்த பொதுமக்களிடம் பயண வசதிகள் மற்றும் குறைகளை குறித்து கேட்டறிந்தார்.


மேலும் மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவிற்கு பயனளித்து வருகிறது என்று பெண்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதையடுத்து பயணிகள் உற்சாகத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "மாநகரப் பேருந்தில் ஆய்வு செய்தபோது, மகளிர் முகத்தில் கண்ட மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது!" என குறிப்பிட்டுள்ளார்.