அரசியல் தமிழகம்

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை.! பாஜகவை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Summary:

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை.! பாஜகவை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் என்று பாஜகவினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அகிம்சை போராட்டத்தை மேற்கொண்டவரான மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது உருவ படத்திற்கு அரசியல் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement