அரசியல் தமிழகம்

நானும் கலைஞரின் பிள்ளைதான்! மனதில் வைத்துக்கொள்ளுங்கள், நினைத்ததை முடிப்பேன்! மு.க.அழகிரி அதிரடி!

Summary:

MK alagiri talk about DMK

ஜனவரி 30, மு.க.அழகிரி பிறந்த நாளையொட்டி தென் மாவட்டங்களில் அவரது விசுவாசிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டாலும், மதுரையில் மு.க.அழகிரியை வாழ்த்தும் பிறந்தநாள் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது.

ஒவ்வொரு பிறந்தநாளிலும் தொண்டர்களை வீட்டில் சந்தித்து வந்த அழகிரி, கருணாநிதி இறப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்தமுறையும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

இந்தநிலையில், அழகிரியின் தீவிர ஆதரவாளரும் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான மோகன்குமார் இல்ல திருமண விழாவுக்கு இன்று காலை மு.க.அழகிரியும் அவர் மனைவி காந்தி அழகிரியும் வருகை தந்தனர்.

என்னுடன் பழகிய திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை. மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம். இந்த நிலை எப்போது மாறப்போகிறது என்பது தெரியும். நானும் கலைஞரின் பிள்ளைதான். என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நினைத்ததைச் சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன் என தெரிவித்தார்.


Advertisement