அரசியல் தமிழகம்

அனல் பறக்கும் அரசியல் களம்.! மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.?

Summary:

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி  தனது ஆதரவாளா்களுடன்  இன்று ஆலோசனை நடத்துகிறாா். தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக, ஆதரவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளாா். 

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்திற்கு 15,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு புதிய கட்சி தொடங்குவதா, மீண்டும் திமுகவில் இணைவதா அல்லது ஏதெனும் ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து மு.க.அழகிரி, ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க உள்ளார். 

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழகம் முழுவதுமிருந்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் திரண்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. வரும் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று மு.க அழகிரி ஏற்கனவே கூறியிருந்த நிலையில்,  ஆதரவாளர்களுடனான இன்றைய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement