கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
சென்னை கோபாலபுரத்தில் மு.க.அழகிரி.! என்ன காரணம்.?

திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அவர்கள் அவருடைய தாயாரின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு வந்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் முகாமிட்டுள்ளதால், அவர், தி.மு.க., வில் சேர்க்கப்படுவாரா அல்லது புதுக்கட்சி துவக்கி, நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைப்பாரா என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அத்துடன் மு.க.அழகிரி பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
அழகிரியை, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலில் தனது பங்கு இருக்கும் என மு.க.அழகிரி கூறியிருந்தார். இந்தநிலையில், அவர் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.