அம்மாகிட்ட சீக்கிரம் வாம்மா...! என் பிள்ளை நிச்சயம் உயிருடன் திரும்பி வருவாள்..... மகளுக்கு தீபாவளி புத்தாடையோடு நாளுக்கு நாள் காத்திருக்கும் தாய்..!!!



missing-girl-hema-mother-waits-with-diwali-clothes

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமாவதியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுமி மாயமாகி 22 நாட்கள் கடந்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மகள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில், தீபாவளிக்காக அவளுக்குப் புத்தாடை வாங்கி வைத்துவிட்டு தாயார் பவானி காத்திருப்பது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

22 நாட்களாகத் தொடரும் தேடுதல் பணி

செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது ஹேமலதா என்ற ஹேமாவதி, கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மாயமானார். காலையில் சிறுமியைக் காணாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து தேடத் தொடங்கினர். ஆனால், நீண்ட நாட்களாகியும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: மாந்திரீகமா..? செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி...! விஷம் குடிக்க போன ஊராட்சி மன்ற தலைவர்... மாயமான 2 பேர்.! திடுக்கிடும் பின்னணி...!!!

உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, ஆலம்பூண்டியில் தற்காலிக முகாம் அமைத்துள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். டிராக்டர் ஓட்டுநர் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மகளுக்காக தீபாவளிப் புத்தாடையுடன் காத்திருக்கும் தாய்

வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டும் சிறுமி குறித்து இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காதது குடும்பத்தினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மகள் எப்போது திரும்பி வருவாள் என்ற எதிர்பார்ப்புடன் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

தீபாவளி நெருங்கும் நிலையில், மகளுக்காகப் புத்தாடை வாங்கி வைத்துள்ளார் தாயார் பவானி. படுக்கையறையில் இருக்கும் மகளின் புகைப்படத்தைப் பார்த்தபடி, 'என் பிள்ளை நிச்சயம் உயிருடன் திரும்பி வருவாள்' என்ற நம்பிக்கையுடன் அவர் காத்திருக்கிறார். சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினரின் வேதனை அப்பகுதி மக்களையும் உருக்கமடையச் செய்துள்ளது.

சிறுமியை விரைவில் மீட்க வேண்டும் என மக்கள் கோரிக்கை

மாயமான ஹேமாவதியை விரைவில் கண்டுபிடித்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி, சிறுமி இருக்கும் இடத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில்.. சிபிசிஐடி கேட்ட ஒரே கேள்வியால் ஆடிப்போன தாய்! இரவு நடந்தது என்ன? கிடுக்குப்பிடி விசாரணயில் திடீர் திருப்பம்..!!