தனுஷ்ஷின் அரசியல் என்ட்ரி சிறப்பு.. ஆனால் இறுதியில்..? அஜித் 2031-ல் முதல்வரா? தனுஷுக்கு செக் வச்ச டாரட் ஜெயஸ்ரீ....! விஜய் ஆட்சி கவிழ சதி... பரபரக்கும் தமிழக அரசியல்...!!!



jayashree-tarot-predictions-tamil-politics

தமிழக அரசியலில் விஜய், தனுஷ், அஜித் ஆகியோரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து டாரட் கார்ட் கணிப்பாளர் ஜெயஸ்ரீ சில கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார். சாணக்கியா யூடியூப் சேனலில் ரங்கராஜ் பாண்டே நடத்திய நேர்காணலில் அவர் இதுகுறித்துப் பேசியுள்ளார். குறிப்பாக, விஜய் ஆட்சியைப் பிடித்தால் ஐந்து ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்வாரா, தனுஷ் அரசியலுக்கு வருவாரா, அஜித்தின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

தனுஷ், அஜித் அரசியலுக்கு வருவார்களா?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான ஆர்வத்துடன் சில அடித்தளப் பணிகளைச் செய்து வருவதாக ஜெயஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். ஏசி வசதியுடன் கூடிய பயிற்சி மையங்கள், இலவச சட்ட உதவி மையங்கள் போன்ற நடவடிக்கைகள் அதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேறுபட்டவர்கள் அல்ல... இவுங்க ரெண்டு பேரும் ஒன்னுதான்..! செங்கோட்டையன் போட்டு உடைத்த ரகசியம்... அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்.!!!

ஆனால், தனுஷின் அரசியல் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், அவரால் இறுதிவரை வெற்றிகரமாகப் பயணிக்க முடியாது என்றும், தமிழக முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்றும் கணித்துள்ளார். அதேபோல், அஜித் 2031-ல் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்பதே தனது கணிப்பு எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் புதிதாக அரசியலுக்கு வரும் வேறு எந்த நடிகரும் முதல்வராகும் வாய்ப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

விஜய் ஆட்சி குறித்து ஜெயஸ்ரீ கணிப்பு

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்றும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், அவரது அரசுக்கு இடையில் நெருக்கடிகளும் ஆட்சி கவிழும் சூழல்களும் உருவாகலாம் எனக் கணித்துள்ளார்.

ஆனால், அந்தச் சவால்களை விஜய் தலைமையிலான அரசு சமாளித்து ஐந்து ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தவெகவில் விஜய்யைத் தவிர வேறு யாரும் முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்பதும் அவரது கணிப்பில் இடம்பெற்றுள்ளது.

தவெகவின் நீண்டகால எதிர்காலம் குறித்து எச்சரிக்கை

விஜய் தலைமையிலான அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் எனக் கணித்துள்ள ஜெயஸ்ரீ, கட்சியின் நீண்டகால வளர்ச்சி குறித்து வேறு கருத்தையும் முன்வைத்துள்ளார். திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளைப் போல தமிழக வெற்றிக் கழகம் நீண்ட காலம் நிலைத்திருப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.

அனிருத்தின் திருமணம் குறித்து 13 ஆண்டுகளுக்கு முன்பு தான் கணித்ததாகக் கூறப்படும் தகவலால் இணையத்தில் கவனம் பெற்றுள்ள ஜெயஸ்ரீயின் இந்த அரசியல் கணிப்புகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. இருப்பினும், இவை டாரட் கார்டுகளின் அடிப்படையில் அவர் தெரிவித்த தனிப்பட்ட கணிப்புகள் மட்டுமே; உறுதிப்படுத்தப்பட்ட அரசியல் நிகழ்வுகள் அல்ல.

 

இதையும் படிங்க: அடுத்தடுத்த அதிர்ச்சி! தவெக-வை உலுக்கும் போதைப்பொருள் விவகாரம்..! உளவுத்துறையின் ரகசிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!!