அப்பாவி பொண்ணு... வாலிபரால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு! அதிரவைக்கும் காரணம்! கதறும் குடும்பத்தினர்...!!!
கர்நாடக மாநிலம் ஹாசனில், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து மிரட்டிய நபரால் மன உளைச்சலுக்கு ஆளான ஏரோநாட்டிகல் பொறியியல் மாணவி ஹீமா உயிரிழந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். புகைப்படங்களை நீக்கக் கோரியபோதும் மிரட்டல் தொடர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுப்பயணத்தின்போது எடுத்த புகைப்படங்கள்
ஹாசன் பகுதியில் ஏரோநாட்டிகல் பொறியியல் படித்து வந்த ஹீமாவுக்கு, முகமது நௌஷாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாகச் சுற்றுப்பயணம் சென்றபோது சில புகைப்படங்களை நௌஷாத் எடுத்துள்ளனர். பின்னர் அந்தப் புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 7-ஆம் வகுப்பு சிறுவன் முதல் அடுத்தடுத்து கல்லூரி மாணவர் வரை 6 பேர் உயிரிழப்பு! பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை..!!!
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹீமா, தனது புகைப்படங்களை இணையத்திலிருந்து உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், நௌஷாத் அவற்றை நீக்க மறுத்ததுடன், மேலும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் மிரட்டலால் மன உளைச்சல்
புகைப்படங்களை வைத்து தொடர்ந்து மிரட்டப்பட்டதால் ஹீமா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிள்ள நிலையில், அவர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணம் குடும்பத்தினரையும், அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விசாரணை நடத்தக் கோரிக்கை
புகைப்படங்களை வெளியிட்டது மற்றும் தொடர்ந்து மிரட்டியதாகக் கூறப்படும் நபர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிடுவது மற்றும் அவற்றைக் கொண்டு மிரட்டுவது தொடர்பாகவும் விவாதங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. புகைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் மாணவியின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை மூலம் தெளிவு கிடைக்க வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! ஹாஸ்பிடலில் கையில் வைத்திருந்த ஐபோன்... திடீரென வெடித்து சிதறி பரவிய தீ..! அருகே பிறந்த பிஞ்சு குழந்தை... பகீர் காட்சி...!!!