ரஜினியும் கமலும் சேர்ந்தால் இந்த ஒரு நல்ல விஷயம் மட்டுமே நடக்கும்.! அமைச்சர் ஜெயகுமார்.!

ரஜினியும் கமலும் சேர்ந்தால் இந்த ஒரு நல்ல விஷயம் மட்டுமே நடக்கும்.! அமைச்சர் ஜெயகுமார்.!Minster jayakumar talks about rajini kamal join together

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி - கமல் இருவரும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினி - கமல் கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தால் அதிமுக, திமுக இதில் எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்துவிட்ட கட்சி என்றும், இந்த கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும் ரஜினி - கமல் மட்டும் இல்லை, புதிதாக வேறு யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

rajini

மேலும், ரஜினி - கமல் இணைந்தால் திமுக உள்பட மற்ற கட்சிகளுக்கு தான் பாதிப்பு என்றும், இவர்கள் இருவரும் இணைந்தால் 16 வயதினிலே போன்ற ஒரு நல்ல படம் உருவாக மட்டுமே வாய்ப்புள்ளது என்றும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.