கஞ்சா, சரக்கே வாழ்க்கையென கொலை, பலாத்கார குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு.. பதறவைக்கும் தகவல்.!

கஞ்சா, சரக்கே வாழ்க்கையென கொலை, பலாத்கார குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு.. பதறவைக்கும் தகவல்.!



Minor Boys Accuse More Rape and Murder Cases

இளம் வயதுடைய சிறார்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் மீதான தண்டனையை உயர்த்தினால் மட்டுமே அதுபோன்ற தவறுகளில் ஈடுபட ஒவ்வொருவரும் யோசனை செய்வார்கள்.

விருதுநகர் மாவட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம், வேலூர் பெண் மருத்துவர் பாலியல் அத்துமீறல் போன்றவற்றில் மட்டுமல்லாது, பல்வேறு கொலை போன்ற குற்றத்திலும் அதிகளவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் ஈடுபடுவது சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டினை பொறுத்த வரையில் கடந்த 2017 ஆம் வருடம் 2,376 பேர் இளம் குற்றவாளியாக கண்டறியப்பட்ட நிலையில், 2018 ஆம் வருடம் இது சற்றே குறைந்து 2,034 ஆக இருந்தது.

ஆனால், 2019 ஆம் வருடத்தில் 2,700 பேர் சிறார் குற்றவாளியாகவும், 2020 ஆம் வருடம் 3,500 பேர் சிறார் குற்றவாளியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 100 பேர் கொடூர குற்றவாளியாகவும் மாறி இருக்கின்றனர். 2021 ஆம் வருடத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசும், மாநில அரசும் தடம்மாறி செல்லும் சிறார்களை நல்வழிப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இவர்களை கொலை மற்றும் பாலியல் விவகார குற்றங்கள் என இரண்டு தன்மையாக பிரிந்து, அவர்களின் குற்ற நிகழ்வுக்கான காரணத்தை கண்டறிந்து நல்வழிப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. 

Minor Boys

இந்தியாவை பொறுத்தமட்டில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் எவ்வுளவு பெரிய குற்றம் செய்தாலும், அதற்கு குறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும். இந்த சட்ட வழிவகையை மாற்றம் செய்ய வேண்டும் என காவல் துறையினர் தரப்பில் இருந்து நெடுங்கால கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மேலும், பெற்றோர் ஆதரவு இல்லாதது, வீட்டிற்கு அடங்காமல் செல்லும் சிறார்களே பெருங்குற்றத்தில் ஈடுபடுவதும் அம்பலமாகியுள்ளது.

இவ்வாறான சிறார்கள் மது, கஞ்சா போன்ற பாதைகளுக்கு அடிமையாகி பாலியல் அத்துமீறல், கொலை, கொள்ளை என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலரை கூலிப்படைகள் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. வறுமையில் வாடும் பெற்றோர் மகனை எப்பாடுபட்டாவது படிக்க வைத்திட வேண்டும் என பள்ளிக்கு அனுப்பினாலும், அவர்களின் தடம் புரண்டுவிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.