கோவில் திருவிழாவில் ஆட்டம் போடும் தமிழக அமைச்சர்! கலக்கல் வீடியோ

கோவில் திருவிழாவில் ஆட்டம் போடும் தமிழக அமைச்சர்! கலக்கல் வீடியோ


minister-sp-valumani---mla-aaru-kutty---dance

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி எம்.எல்.ஏ ஆறு குட்டியுடன் இணைந்து அசத்தல் நடனம் புரியும் வீடியோ காட்சி தற்சமயம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கைகோல பாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறு குட்டியுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டார்.

tamilspark

கும்பாபிஷேக விழா முடிந்ததும் விழாக் குழுவினர் சார்பாக  ஒயிலாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிறகு கலைக் குழுவினருடன் இணைந்து பொதுமக்களும் சிலர் ஆடத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் எம்.எல்.ஏ ஆறு குட்டியுடன் இணைந்து ஆடத் தொடங்கினார். 

இந்த வீடியோவை எடுத்த யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.