அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவிற்கு சாமானிய மக்கள் முதல் முன்கள பணியாளர்கள் வரை பாதிப்படைந்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தொடர்ந்து நாட்களுக்கு நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளது. இந்தநிலையில், குன்னம் தொகுதியின் எம்எல்ஏ-வும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக, எஸ்.எஸ்.சிவசங்கர் தன் முகநூல் பக்கத்தில், கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு வாரத்திற்கு, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நலமாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.