தமிழகம்

நான் கொரோனாவுடன் வாழ பழகிட்டேன்.. மாஸ்க் கூட போடுறதில்லையே.. அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி.!

Summary:

minister-sellu-raju-says-people-to-live-with-coronavirus-like-me-without-wearing-mask

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கவும், முககவசம், சமூக இடைவெளி, கைகளை சோப்பு போட்டு கழுவவும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருமலை நாயக்கர் மகாலை சுற்றி நடந்து வரும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். 

அப்போது நிபுணர் ஒருவர் ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நான் கொரோனாவுடன் வாழ பழகிட்டேன். அதனால் தான் முககவசம் கூட அணியவில்லை என்று கூறியுள்ளார். 


Advertisement