தவறான வீடியோ பரவல்! சைபர் க்ரைமில் புகார் அளித்த ஜெமினி பட நடிகை கிரண் ரத்தோட்!
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்! கட்சி நிர்வாகிகள் வரவேற்பு!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், அவரது மகன் இத்ரீஸ் கபீல் மற்றும் மருமகன் முகமது காசிப் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இன்று வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது கூடிய கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.